ஓசூர் அருகே மின்னல் தாக்கி பிளஸ்-1 மாணவன் சாவு

ஓசூர் அருகே மழைக்கு மரத்தடியில் நின்றபோது மின்னல் தாக்கி பிளஸ்-1 மாணவன் பரிதாபமாக இறந்தான்.

Update: 2022-05-04 18:02 GMT
ஓசூர்:
ஓசூர் அருகே மழைக்கு மரத்தடியில் நின்றபோது மின்னல் தாக்கி பிளஸ்-1 மாணவன் பரிதாபமாக இறந்தான்.
பிளஸ்-1 மாணவன்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தின்னூர் அருகே உள்ள ஜீவா நகர் பகுதியை சேர்ந்தவர் முனியப்பா. இவரது மகன் சிவநேசன் (வயது 17). இவன் ஓசூரில் தேன்கனிக்கோட்டை சாலையில் ரெயில் நிலையம் அருகில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தான்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் மாணவன் டியூசனுக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டுக்கு வந்து கொண்டு இருந்தான். அப்போது அந்த பகுதியில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் மாணவன் அங்குள்ள சனீஸ்வரர் கோவில் பக்கம் மரத்தடியில் நின்றான். 
மின்னல் தாக்கி சாவு
அப்போது திடீரென மின்னல் மாணவன் மீது தாக்கியது. இதில் படுகாயம் அடைந்த மாணவன் சிவநேசன் பரிதாபமாக இறந்தான். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஓசூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். 
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்னல் தாக்கி பிளஸ்-1 மாணவன் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்