ஊழியர்கள் திடீர் மறியல்

தனியார் ஆம்னி பஸ்முன் ஊழியர்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2022-05-04 17:56 GMT
ராமநாதபுரம், 
 ராமேசுவரத்தில் இருந்து சென்னைக்கு தினசரி இரவு நேரத்தில் தனியார் ஆம்னி பஸ் சென்று வருகிறது. இந்த பஸ் ஊழியர்கள் தங்களுக்கு கடந்த பல மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை என்று கூறி 2 டிரைவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் நேற்று இரவு பழைய பஸ் நிலையத்திற்கு வந்தனர். இவர்கள் ராமேசுவரத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற பஸ் ராமநாதபுரம் பழைய பஸ் நிலையத்திற்கு வந்தபோது பஸ்சின் முன் அமர்ந்து தங்களுக்கு சம்பளம் வழங்கும் வரை பஸ் செல்ல அனுமதிக்க மாட்டோம் என்று கூறி திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த கேணிக்கரை போலீசார் அங்கு விரைந்து வந்து பஸ் நிறுவனத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஓரிரு நாட்களில் சம்பள பாக்கியை வழங்குவதாக உறுதி அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதன் காரணமாக சுமார் ஒரு மணி நேரம் அந்த பஸ் தாமதமாக சென்றது.D

மேலும் செய்திகள்