மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர்,
விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் குமரேசன் தலைமை தாங்கினார். செயலாளர் நாகராஜ் முன்னிலை வகித்தார். கிராமசபை கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் அரசாணை எண் 52 அமல்படுத்த மறுத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தேசிய ஊரக வேலை வாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படாமல் உள்ள அடையாள அட்டையை உடனடியாக வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள் வேலை வாய்ப்பில் புகைப்படம் எடுப்பதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.