குறளோவியம் ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஊக்கப்பரிசு
குறளோவியம் ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கலெக்டர் ஊக்கப்பரிசு வழங்கினார்.
ராணிப்பேட்டை
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறையின் தமிழ் இணைய கல்வி கழகம் சார்பில், தீராக்காதல் திருக்குறள் என்ற பெயரில் மாநில அளவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு என "குறளோவியம்'' என்ற பெயரில் ஓவியப்போட்டி நடைபெற்றது.
இப்போட்டியில் சிறந்த 365 ஓவியங்கள் தேர்வு செய்யப்பட்டு, முதல் மூன்று இடங்களைப் பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ -மாணவிகளுக்கு தமிழக முதல்-அமைச்சரால் பரிசு வழங்கப்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டத்திலிருந்து இப்போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் 8 பேருக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஊக்கப்பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி வாழ்த்தினார்.