நவ்நீத் ரானா எம்.பி. வசிக்கும் அடுக்குமாடி கட்டிடத்தை ஆய்வு செய்ய சென்ற மாநகராட்சி அதிகாரிகள்
சட்டவிரோத கட்டுமானம் தொடர்பாக நவ்நீத் ரானா வசிக்கும் அடுக்குமாடி கட்டிடத்தை ஆய்வு செய்ய வந்த மாநகராட்சி அதிகாரிகள் பூட்டிக்கிடந்ததால் திரும்பி சென்றார்.
மும்பை,
சட்டவிரோத கட்டுமானம் தொடர்பாக நவ்நீத் ரானா வசிக்கும் அடுக்குமாடி கட்டிடத்தை ஆய்வு செய்ய வந்த மாநகராட்சி அதிகாரிகள் பூட்டிக்கிடந்ததால் திரும்பி சென்றார்.
கைது
அமராவதி எம்.பி. நவ்நீத் ரானா, அவரது கணவர் ரவி ரானா எம்.எல்.ஏ. முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே வீட்டின் முன் அனுமன் பஜனை பாடப்போவதாக அறிவித்தனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சிவசேனாவினரின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மும்பை வந்த அவர்களை கடந்த 23-ந் தேதி கைது செய்தனர். அவர் மீது இருபிரிவினர் இடையே மோதலை தூண்டியது, தேசத்துரோகம் உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர்களுக்கு சிறப்பு கோர்ட்டு ஜாமீன் வழங்கியது.
மாநகராட்சி நோட்டீஸ்
இந்தநிலையில் நவ்நீத் ரானாவுக்கு சொந்தமான கார் மேற்கு, 14-வது ரோட்டில் உள்ள லாவி அடுக்குமாடி கட்டிடத்தின் 8-வது மாடியில் உள்ள வீட்டில் சட்டவிரோதமாக கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மும்பை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியது. அந்த கட்டிட சொசைட்டி மற்றும் நவ்நீத் ரானா உள்பட 8-வது மாடியில் வசிப்பவர்களுக்கு இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருந்தது.
இந்தநிலையில் மாநகராட்சி அதிகாரிகள் 7 முதல் 8 பேர் கொண்ட குழு மதியம் 12.30 மணியளவில் லாவி கட்டிடத்திற்கு ஆய்வு செய்ய வந்தனர். ஆனால் அந்த அடுக்குமாடி கட்டிடத்தின் கேட் பூட்டப்பட்டு இருந்தது. இதனால் அதிகாரிகள் குழு ஆய்வு செய்யாமல் திரும்பியது.
இந்த குழு நாளை அல்லது நாளை மறுநாள் மீண்டும் அந்த கட்டிடத்திற்கு சென்று ஆய்வு செய்வார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.
மும்பை மாநகராட்சி சிவசேனா கட்டுப்பாட்டில் இருப்பது குறிப்பிடத்தக்கது.