மழைக்காலத்திற்குள் சாலை பணிகளை முடிக்க வேண்டும்- அதிகாரிகளுக்கு, மந்திரி ஏக்நாத் ஷிண்டே அறிவுறுத்தல்.

தானேயில் சாலை பணிகளை, மழைக்காலத்திற்குள் முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு, மந்திரி ஏக்நாத் ஷிண்டே அறிவுறுத்தி உள்ளார்.

Update: 2022-05-04 17:28 GMT
மந்திரி ஏக்நாத் ஷிண்டே
தானே, 
தானேயில் சாலை பணிகளை, மழைக்காலத்திற்குள் முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு, மந்திரி ஏக்நாத் ஷிண்டே அறிவுறுத்தி உள்ளார். 
 ஆய்வு கூட்டம்
பருவமழையின்போது, பெருநகரங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கி கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதும், இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதும் வாடிக்கையாகி வருகிறது. 
இதை தடுக்கும் வகையில், மழைக்கால முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அடுத்த மாதம் மழைக்காலம் தொடக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது. 
இந்நிலையில், தானே மாவட்ட பொறுப்பு மந்திரியான ஏக்நாத் ஷிண்டே, அந்த மாவட்ட அதிகாரிகளுடன் மழைக்கால முன் எச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆய்வு கூட்டத்தை நடத்தினார். 
பேரிடர் மீட்பு படை
அப்போது, தானே மாவட்ட பொறுப்பு மந்திரி ஏக்நாத் ஷிண்டேவிடம் மழைக்கால முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். 
மழைக்காலத்தை எதிர்கொள்ள தேசிய பேரிடர் மீட்பு படையினர் 2 குழுக்களாக தானேயில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். இதில் ஒரு குழு தானே நகரிலும், மற்றொன்று கல்யாண் நகரிலும் இருந்து செயல்படும் என்று தெரிவித்தனர். 
மந்திரி அறிவுறுத்தல்
இதைத்தொடர்ந்து கூட்டத்தில் மந்திரி ஏக்நாத் ஷிண்டே பேசியதாவது:-
மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பு, தற்போது நடந்துவரும் சாலை பணிகள் மற்றும் அது தொடர்பான பணிகளை விரைந்து சரியான நேரத்தில் முடிக்க வேண்டும்.
தற்போது நடைபெற்றுவரும் மெட்ரோ பணியால், தானேயில் போக்குவரத்து சிக்கல்கள் இருப்பதாக தகவல் வருகின்றன. மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பு இதற்கு தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பல்வேறு துறைகளின் மூத்த அதிகாரிகள், போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் அவ்வப்போது நேரில் சென்று நிலைமையை ஆய்வு செய்யவேண்டும்.
மின்சார வினியோக நிறுவனங்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள், எந்த சூழ்நிலையையும் சமாளிக்க தயாராக இருக்கவேண்டும். 
மாவட்ட கட்டுப்பாட்டு அறைகள் எல்லா நேரத்திலும் தகுந்த மீட்பு வசதிகளுடன் செயல்பட வேண்டும்.
இ்வ்வாறு அவர் பேசினார். 

மேலும் செய்திகள்