விழுப்புரத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
விழுப்புரத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
விழுப்புரம்
விழுப்புரம்-கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த மாவட்ட டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட சி.ஐ.டி.யு. தலைவர் முத்துக்குமரன் தலைமை தாங்கினார். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் மாவட்ட கலெக்டரின் அனுமதியின்றி மூடப்பட்ட டாஸ்மாக் கடையை திறக்க வேண்டும், டாஸ்மாக் ஊழியர்கள் மீதான சட்டவிரோத தற்காலிக பணிநீக்க நடவடிக்கையை உடனடியாக ரத்துசெய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.