திருவெண்ணெய்நல்லூர் அருகே பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் மாவட்ட முதன்மை நீதிபதி பூர்ணிமா தலைமையில் நடைபெற்றது

திருவெண்ணெய்நல்லூர் அருகே பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் மாவட்ட முதன்மை நீதிபதி பூர்ணிமா தலைமையில் நடைபெற்றது

Update: 2022-05-04 17:19 GMT

திருவெண்ணெய்நல்லூர்

திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள பெரியசெவலை கிராமத்தில் விழுப்புரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் சட்ட உதவி மற்றும் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட முதன்மை நீதிபதி பூர்ணிமா தலைமை தாங்கி பேசினார். விழுப்புரம் குற்றவியல் நீதித்துறை நடுவர் அருண்குமார் மற்றும் துணை குற்றவியல் நீதித்துறை நடுவர் விஜயகுமார், உளுந்தூர்பேட்டை குற்றவியல் நீதித்துறை நடுவர் சண்முகநாதன் ஆகியோர் கலந்துகொண்டு விழிப்புணர்வு கருத்துகளையும், சட்ட ஆலோசனைகளையும் வழங்கினார்கள். குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர் நீலாம்பாள் பேசுகையில் பெண் குழந்தைகளுக்கு கருவிலிருந்து 18 வயது வரை எந்த பிரச்சினையாக இருந்தாலும் பாலியல், கல்வி உரிமை, பெண்ணடிமை, குழந்தை தொழிலாளர், இது போன்று எந்த பிரச்சினையாக இருந்தாலும் 1098 என்ற இலவச தொலைபேசி எண்ணில் எப்பொழுது வேண்டுமானாலும் அழைத்து உங்களையும், உங்கள் உரிமையையும் பாதுகாத்துக் கொள்ளலாம் என்றார்.
இதில் மாணவர்களிடம் நல்ல தொடுதல், தீய தொடுதல் பற்றிய நீதிபதியின் கேள்விகளுக்கு சரியான முறையில் பதில் அளித்த மாணவன் வினோத்துக்கு நீதிபதி பூர்ணிமா பரிசு வழங்கி பாராட்டினார். இதில் பெரிய செவலை ஊராட்சி தலைவர் வீரப்பன், துணை தலைவர் சக்கரவர்த்தி, வக்கீல் மணிராஜ், கிராம நிர்வாக அலுவலர் சிவராஜ், நீதித்துறை அலுவலர்கள், குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர்கள், மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்