மந்திரிசபை மாற்றம் குறித்து அமித்ஷா என்ன சொன்னார்?-பசவராஜ் பொம்மை
மந்திரிசபை மாற்றம் குறித்து அமித்ஷா என்ன சொன்னார் என்பது குறித்து பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்
பெங்களூரு: உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று முன்தினம் பெங்களூருவுக்கு வந்தார். அவருடன் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மந்திரிசபை மாற்றம் குறித்து ஆலோசனை நடத்தினார். இதுகுறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கர்நாடகத்தில் வளர்ச்சி பணிகளுக்கு ஊக்கம் அளிக்கும் நோக்கத்தில் உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகின்றன. அதனை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அடுத்த வாரம் மாவட்ட கலெக்டர்கள் மாநாடு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திட்ட பணிகள் மற்றும் பயனாளிகள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது. மந்திரிசபை மாற்றம் குறித்து உள்துறை மந்திரி அமித்ஷாவுடன் ஆலோசனை நடத்தினேன். இதுகுறித்து டெல்லி சென்ற பிறகு பேசுவதாக கூறியுள்ளார்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.