வத்தலக்குண்டுவில் எல்.ஐ.சி. ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

வத்தலக்குண்டுவில் எல்.ஐ.சி. ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2022-05-04 15:29 GMT
வத்தலக்குண்டு:
வத்தலக்குண்டு எல்.ஐ.சி. கிளை அலுவலகம் முன்பு ஊழியர்கள் மற்றும் முகவர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
எல்.ஐ.சி. அரசு பங்குகளை தனியாருக்கு விற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு எல்.ஐ.சி. ஊழியர் சங்க கிளை தலைவர் ரமேஷ்பாண்டியன் தலைமை தாங்கினார். பொறுப்பாளர் ரமேஷ் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.
இதில், ஊழியர் சங்க செயலாளர் நாகப்பாண்டி, முகவர் சங்க தலைவர் துரைராஜ், செயலாளர் பரமசிவம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்