பிளஸ்-2 தேர்வில் காப்பியடிப்பதை தடுக்க 9 பறக்கும் படைகள்
திண்டுக்கல் மாவட்டத்தில் 86 மையங்களில் நடைபெறும் பிளஸ்-2 தேர்வில் காப்பியடிப்பதை தடுக்க 9 பறக்கும் படைகளும், 220 பேர் கொண்ட நிலை குழுக்களும் நியமிக்கப்பட்டு உள்ளன.
திண்டுக்கல்:

பிளஸ்-2 தேர்வு
தமிழகத்தில் பிளஸ்-2 மாணவர்களுக்கு இன்று (வியாழக்கிழமை) பொதுத்தேர்வு தொடங்குகிறது. அதேபோல் பிளஸ்-1 தேர்வு 10-ந்தேதியும், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நாளையும் (வெள்ளிக்கிழமை) தொடங்க இருக்கிறது. இதையொட்டி அனைத்து மாவட்டங்களுக்கும் வினாத்தாள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.
அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல், பழனி, வேடசந்தூர், வத்தலக்குண்டு ஆகிய 4 கல்வி மாவட்டங்களுக்கும் வினாத்தாள் ஏற்கனவே வந்துவிட்டன. அவை துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் தனி அறைகளில் வைக்கப்பட்டு உள்ளன. அதோடு வினாத்தாள் இருக்கும் அறைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, கண்காணிக்கப்படுகிறது.
86 தேர்வு மையங்கள்
திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை 10 ஆயிரத்து 646 மாணவர்கள், 11 ஆயிரத்து 429 மாணவிகள் என மொத்தம் 22 ஆயிரத்து 75 பேர் பிளஸ்-2 தேர்வை எழுதுகின்றனர். இதையொட்டி மாவட்டம் முழுவதும் 86 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. இந்த தேர்வு மையங்களில் மாணவர்கள் போதிய இடைவெளிவிட்டு அமர வசதியாக இருக்கைகள் அமைக்கப்பட்டன.
பின்னர் இருக்கைகளில் மாணவர்களின் பதிவு எண்களை எழுதப்பட்டு தயார் நிலையில் உள்ளன. மேலும் அனைத்து தேர்வு மையங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது. மாணவ-மாணவிகள் பலத்த சோதனைக்கு பின்னரே தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட உள்ளனர். செல்போன், கால்குலேட்டர் போன்றவற்றை எடுத்து செல்ல அனுமதி இல்லை. மேலும் அனைத்து மாணவ-மாணவிகளும் முககவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
9 பறக்கும் படைகள்
இதற்கிடையே தேர்வில் ஆள் மாறாட்டம், காப்பியடித்தல் உள்ளிட்ட முறைகேடுகளை தடுக்க தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக முதன்மை கல்வி அலுவலர் கருப்புசாமி மேற்பார்வையில் மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் அதிகாரிகளை கொண்ட 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
இந்த பறக்கும் படையினர் தேர்வு மையங்களில் திடீர் ஆய்வு மேற்கொள்வார்கள். இதுதவிர தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் உள்பட 220 பேரை கொண்ட நிலை குழுக்கள் நியமிக்கப்பட்டு இருக்கின்றன. இந்த நிலை குழுவினர் தினமும் ஒரு பள்ளியில் சுழற்சி முறையில் பணியாற்றி முறைகேடுகள் நடைபெறாமல் தடுப்பார்கள் என்று கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.