கொடக்காரமூலை வாய்க்காலை ரூ.5 லட்சத்தில் தூர்வாரும் பணி

சீர்காழி அருகே கொடக்கார மூலை வாய்க்காலை ரூ.5 லட்சத்தில் தூர்வாரும் பணி நடந்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2022-05-04 15:11 GMT
சீர்காழி:
சீர்காழி அருகே கொடக்கார மூலை வாய்க்காலை ரூ.5 லட்சத்தில் தூர்வாரும் பணி நடந்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
வாய்க்காலை தூர்வார ேகாரிக்கை
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா கொள்ளிடம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மாதானம் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் கொடக்காரமூலை பாசன வாய்க்கால் உள்ளது. இந்த பாசன வாய்க்காலை நம்பி ஏராளமான விளைநிலங்கள் உள்ளன. இந்த நிலையில் இந்த வாய்க்காலை தூர்வார வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். 
இந்த நிலையில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மேற்கண்ட வாய்க்காலை தூர்வாரும் பணியை மேற்கொள்ள பொதுப்பணித்துறை சார்பில் ரூ.5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து வாய்க்கால் தூர்வாரும் பணி தொடங்கி நடந்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
விவசாயிகளுக்கு பயன்
இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கொடக்காரமூலை வாய்க்கால் 6 கிலோமீட்டர் தூரத்திற்கு ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் முழுமையாக தூர்வாரப்பட உள்ளது. 
இது விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றனர்.  அப்போது விவசாய சங்க தலைவர் ஜெயராமன், செயலாளர் சுந்தர வேலு, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் குமார், தி.மு.க. நிர்வாகிகள் அன்பழகன், விஜி மற்றும் பலர் உடன் இருந்தனர்.
--

மேலும் செய்திகள்