பதக்கம் வென்ற தூத்துக்குடி தேசிய மாணவர் படை அதிகாரிக்கு பாராட்டு
தேசிய மாணவர் படை பயிற்சியில் பதக்கம் வென்ற தூத்துக்குடி அதிகாரியை போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பாராட்டினார்.
தூத்துக்குடி:
மத்தியபிரதேசம் மாநிலம் குவாலியரில் உள்ள தேசிய மாணவர் படை அதிகாரிகள் பயிற்சி அகாடமியில் தேசிய மாணவர் படை அதிகாரிகளுக்கான பயிற்சி நடந்தது. இந்த பயிற்சி அகாடமியில் தமிழகத்தைச் சேர்ந்த 15 பேர் உட்பட அனைத்து மாநிலங்களில் இருந்தும் மொத்தம் 112 பேர் கலந்து கொண்டனர். இதில் தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி தேசிய மாணவர் படை அதிகாரி லோலிடா என்பவரும் கலந்து கொண்டார். தொடர்ந்து பயிற்சியில் சிறப்பாக செயல்பட்டு, முதல் இடம் பிடித்து தங்கப்பதக்கத்தை வென்று உள்ளார்.
இதைத் தொடர்ந்து லோலிடா நேற்று தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அவரை பாரட்டி போலீஸ் சூப்பிரண்டு பரிசு வழங்கினார்.