பழனி பகுதியில் கலாக்காய் விளைச்சல் அமோகம்
பழனி பகுதியில் கலாக்காய் அமோக விளைச்சல் அடைந்துள்ளது.
பழனி:
பழனி அருகே கோம்பைபட்டி, ராமபட்டினம்புதூர் உள்ளிட்ட மலையடிவார பகுதிகளில் கலாக்காய் செடிகள் அதிக அளவில் உள்ளன. இதில் விளையும் கலாக்காய் புளிப்பு, துவர்ப்பு, இனிப்பு சுவை கொண்டது.
இவை ஊறுகாய் தயாரிப்பதற்கும், பேக்கரிகளிலும் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. தற்போது கோம்பைபட்டி பகுதியில் கலாக்காய் விளைச்சல் அமோகமாக உள்ளது.
இதை இங்குள்ள விவசாயிகள் பறித்து பழனி, ஒட்டன்சத்திரம் பகுதிகளில் விற்பனை செய்கின்றனர். தற்போது ஒரு கிலோ கலாக்காய் ரூ.100 வரை விற்கப்படுகிறது. இதை பலரும் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.