விஷம் குடித்து வாலிபர் தற்கொலை

வேதாரண்யம் அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை

Update: 2022-05-04 14:18 GMT
வேதாரண்யம்:
வேதாரண்யம் ராமகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் மைக்கேல்ராஜ் (வது32). இவரது மனைவி தேன்மொழி (25). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சம்பவத்தன்று கணவன்- மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் தேன்மொழி கோபித்து கொண்டு தனது குழந்தைகளுடன் சென்று விட்டார். இதனால் மனமுடைந்த மைக்கேல்ராஜ் விஷத்தை குடித்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வேதாரண்யம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் வழக்குப்பதிவு செய்து மைக்கேல்ராஜ் உடலை கைப்பற்றி வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்