தூத்துக்குடியில் செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடியில் கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-05-04 14:03 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு எம்.ஆர்.பி.செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் தூத்துக்குடி சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே புதன்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு இன்பன்டா ராஜாத்தி தலைமை தாங்கினார். குமார் கோரிக்கை குறித்து விளக்கி பேசினார். அரசு ஊழியர் சங்க வட்ட செயலாளர் கணேசன், வணிகவரித்துறை மாவட்ட செயலாளர் சங்கர், ரேடியாலஜிஸ்ட் சங்க மாநில செயலாளர் தவமணி பீட்டர், கால்நடை ஆய்வாளர் சங்க மாவட்ட செயலாளர் மனோகரன், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் தமிழரசன் ஆகியோர் பேசினர். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் முருகன் ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்து பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தின் போட்டி தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு ஒப்பந்த முறையில் தமிழக அரசு ஆஸ்பத்திரிகளில் நிரந்தர ஊழியர்களுக்கு இணையாக ஒரே பணியை செய்து வருகிறோம். ஆனால் எங்களுக்கு கறைந்த ஊதியம் வழங்கப்படுகிறது. கொரோனா காலத்தில் உயிரை பணயம் வைத்து பணியாற்றிய செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் சங்க உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்