குடியாத்தத்தில் கத்தரி வெயில் முதல் நாளிலேயே ஆலங்கட்டி மழை
குடியாத்தத்தில் கத்தரி வெயில் முதல் நாளிலேயே ஆலங்கட்டி மழை பெய்தது.
குடியாத்தம்
கத்தரி வெயில் எனும் அக்னி நட்சத்திரம் தொடங்கியது. கோடைகாலம் தொடங்கும் முன்னரே சுட்டெரித்த வெயிலால் கத்தரி வெயில் தொடங்கும் நாளை சமாளிக்க முடியுமா என்ற கவலையில் பொதுமக்கள் இருந்தனர்.
அதன்படி கத்தரி வெயிலின் முதல் நாள் பகலில் வெயில் வறுத்தெடுத்த நிலையில் குடியாத்தம் பகுதியில் மாலை சுமார் அரைமணிநேரம் ஆலங்கட்டியுடன் பலத்த மழை பெய்தது. இதனை கண்ட சிறுவர்கள் மழையை பொருட்படுத்தாமல் கைகளில் ஆலங்கட்டிகளை சேகரித்து மகிழ்ந்தனர்.
இதேபோல் குடியாத்தத்தை அடுத்த மேல்ஆலத்தூர், சேம்பள்ளி, தட்டப்பாறை உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது. அக்னி வெயில், ஆலங்கட்டி மழையால் தணிந்ததோடு குளிர் காற்று வீசியதால் பொதுமக்கள் ஆறுதல் அடைந்தனர்.