மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்து விவசாயி சாவு

பொன்னை அருகே மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்து விவசாயி பரிதாபமாக இறந்தார்.;

Update: 2022-05-04 12:20 GMT
திருவலம்

வேலூர் மாவட்டம் பொன்னை அருகில் உள்ள பரமசாத்து பெரிய ஊர் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 45), விவசாயி. இவர் பொன்னைக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். பரமசாத்து அருகே வரும்போது திடீரென மோட்டார்சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்தார்.

அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு ராணிப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி அளித்து, மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சந்திரசேகர்  பரிதாபமாக உயிரிழந்தார். 

இதுகுறித்து பொன்னை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லெனின் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்