சிவன் கோவில்களில் தாராபிஷேகம்

அக்னி நட்சத்திரத்தையொட்டி சிவன் கோவில்களில் தாராபிஷேகம் தொடங்கியது.

Update: 2022-05-04 12:15 GMT
திருவண்ணாமலை

அக்னி நட்சத்திரத்தையொட்டி சிவன் கோவில்களில் தாராபிஷேகம் தொடங்கியது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. வெயில் அளவு இதுவரை சுமார் 106 டிகிரி வரை பதிவாகியுள்ளது. இந்த நிலையில் நேற்று அக்னி நட்சத்திரம் தொடங்கியது. அக்னி நட்சத்திர காலங்களில் வெயிலின் தாக்கம் இன்னும் அதிகமாக இருக்குமோ என மக்கள் கலகத்தில் உள்ளனர். அக்னி நட்சத்திரம் தொடங்கும் நாளில் இருந்து சிவன் கோவில்களில் மூலவருக்கு தாராபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டும் அக்னி நட்சத்திரம் தொடங்கும் நாளான நேற்று திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில், கிரிவலப் பாதையில் உள்ள அஷ்ட லிங்க கோவில்கள் உள்ளிட்ட சிவன் கோவில்களில் தாராபிஷேகம் நடந்தது. அதாவது கோவில்களில் சிவ லிங்கத்துக்கு மேல் தாராபாத்திரம் பொருத்தப்பட்டு அதில் ஜவ்வாது, சந்தனம் உள்ளிட்ட வாசன திரவியங்கள் சேர்க்கப்பட்ட புனித நீர் காலையில் இருந்து மாலை வரை சாமி மீது துளி துளியாக விழுந்து அபிஷேகம் செய்யும் வகையில் அமைக்கப்பட்டு இருக்கும். அக்னி நட்சத்திரம் முடியும் நாளான வருகிற 28-ந் தேதி வரை இந்தத் தாராபிஷேகம் சாமிக்கு நடைபெறும் என கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்