அக்னி வசந்த விழாவில் துரியோதனன் படுகளம்

கலவையில் அக்னி வசந்த விழாவில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது.

Update: 2022-05-04 12:07 GMT
கலவை

கலவைைய அடுத்த பன்னீர்தாங்கல் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட திரவுபதியம்மன் கோவிலில் ஏப்ரல் மாதம் 14-ந்தேதி கலவை சச்சிதானந்த சுவாமி தலைமையில் கும்பாபிஷேகமும், அன்று அக்னி வசந்த விழாவும் தொடங்கியது. வெட்டுவாணம் மகா பாரத சொற்பொழிவாளர் ரேவதி, கவியாளர் நல்லாலம் கிருஷ்ணன், பிரம்மதேசம் நாடகக் குழுவினர் சங்கர் ஆகியோர் மகா பாரத சொற்பொழிவு நடத்தினர். 

அதில் சுபத்திரை திருமணம், அர்ஜுனன் தபசு, கர்ண மோட்சம் நேற்று பதினெட்டாம் போர் மற்றும் போரில் துரியோதனன் படுகளம், மாலை தீமிதி திருவிழா நடந்தது. அதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
அதைத்தொடர்ந்து  தர்மர் பட்டாபிஷேகம் நடக்கிறது. திருவிழாவை பன்னீர்தாங்கல் மக்கள், இளைஞர்கள் முன்னின்று நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்