ெரயில் மோதி மாடு பலி

லத்தேரியில் காளைவிடும் விழாவில் பங்கேற்ற மாடு ெரயில் மோதி பலியானது.

Update: 2022-05-04 11:04 GMT
கே.வி.குப்பம்

லத்தேரியில் காளை விடும் திருவிழா நடந்தது. அதில் எடப்பாளையம் நாமதேவன் மகன் சரவணன் என்பவருக்கு சொந்தமான காளை மாடு பங்கேற்றது. அது, ஓடுபாதையைக் கடந்து ஓடியபோது வழிதவறி அருகில் உள்ள ெரயில் பாதையைக் கடந்தது. 

அப்போது அந்த வழியாகச் சென்று கொண்டிருந்த கோவை எக்ஸ்பிரஸ் ெரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பலியானது.

மேலும் செய்திகள்