கத்தியை காட்டி பணம் பறிக்க முயன்றவர் கைது

கத்தியை காட்டி பணம் பறிக்க முயன்றவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-05-03 23:32 GMT
திருச்சி:
திருச்சி பீமநகர் பண்டரிநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் கார்த்தி(வயது 30). இவர் சம்பவத்தன்று பீமநகர் சவேரியார் கோவில் தெருவில் நின்றபோது, மேட்டுத்தெரு பகுதியை சேர்ந்த கிருபாகரன்(21) கத்தியை காட்டி கார்த்தியிடம் ரூ.1000-த்தை பறிக்க முயன்றார். இது குறித்து பாலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருபாகரனை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்