481 கிலோ கலப்பட டீத்தூள் பறிமுதல்

481 கிலோ கலப்பட டீத்தூள் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2022-05-03 23:31 GMT
திருச்சி:

திருச்சி கே.கே.நகரில் உள்ள சில டீக்கடைகளில் கலப்பட டீத்தூள் பயன்படுத்துவதாக திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு புகார் வந்தது. இதைத்தொடர்ந்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கே.கே.நகரில் உள்ள சம்பந்தப்பட்ட டீக்கடைகளில் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது, அந்த கடையில் கலப்பட டீத்தூள் பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்து 6 கிலோ கலப்பட டீத்தூளை அதிகாரிகள் கைப்பற்றினார்கள். மேலும் அந்த கடைக்காரர்கள் கொடுத்த தகவலின்பேரில் கே.கே.நகர் சீதாதேவி கோவில் அருகில் உள்ள பகுதியில் புஷ்பராஜ், அவருடைய சகோதரர்கள் கருணாகரன், விஜயகுமார் ஆகியோரிடம் இருந்து 475 கிலோ கலப்பட டீத்தூள் மற்றும் கலப்படத்துக்கு பயன்படுத்தும் பொருட்கள் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்