பெண்ணுக்கு கொலை மிரட்டல்; வாலிபர் கைது

பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-05-03 23:20 GMT
சேலம்:
சேலம் சின்னதிருப்பதியை சேர்ந்தவர் கேசவன் (வயது 20). தொழிலாளி. இவர் இளம்பெண் ஒருவரை காதலித்து உள்ளார். இந்த நிலையில் ஒரு வழக்கு சம்பந்தமாக கேசவனை போலீசார் கைது செய்தனர். இதனால் அந்த பெண் காதலனுடன் பேசுவதை தவிர்த்து உள்ளார். 
சம்பவத்தன்று பெண்ணின் வீட்டிற்கு சென்று தன்னிடம் பேசும்படி கேசவன் கூறினார். அதற்கு அவர் மறுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்த புகாரின் பேரில் அஸ்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கேசவனை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்