டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை
டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;
சேலம்:
சேலம் ஜான்சன்பேட்டையை சேர்ந்தவர் விஜி (வயது 35), கால் டாக்சி டிரைவர். இவருடைய மனைவி ஜோதி. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில் விஜி நேற்று இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அஸ்தம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் விஜியின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், விஜி மீது வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் சில போலீஸ் நிலையங்களில் பதிவாகி இருந்ததும், குடும்ப பிரச்சினையால் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. மேலும் அவரது தற்கொலைக்கு வேறு காரணம் ஏதும் உள்ளதா? என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.