கஞ்சா விற்ற வாலிபர் சிக்கினார்

கஞ்சா விற்ற வாலிபர் சிக்கினார்.

Update: 2022-05-03 23:06 GMT
கொண்டலாம்பட்டி:
சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள தம்மநாயக்கன்பட்டி பகுதியில் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் கொண்டலாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் மற்றும் போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு கஞ்சா விற்ற அதே பகுதியை சேர்ந்த பழனியாண்டி (வயது 25) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.,

மேலும் செய்திகள்