மது விற்ற 2 பெண்கள் மீது வழக்கு

மது விற்ற 2 பெண்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Update: 2022-05-03 22:54 GMT
கெங்கவல்லி:
கெங்கவல்லி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் நேற்று ஆணையம்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சிவன் கோவில் அருகே சட்டவிரோதமாக மது விற்ற வடக்கு வீதியை சேர்ந்த பொன்னுசாமி மனைவி கலைச்செல்வி (வயது 37) என்பவரை பிடித்தனர். அதே பகுதியில் முருகேசன் மனைவி பாஞ்சாலை என்பவரும் மதுவிற்ற போது சிக்கினார். பிடிபட்ட 2 பெண்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்களிடம் இருந்து 25 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் செய்திகள்