கோவில் திருவிழாவில் தகராறு: லாரி டிரைவரை வெட்டிய வாலிபர் கைது

கோவில் திருவிழாவில் தகராறு காரணமாக லாரி டிரைவரை வெட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2022-05-03 22:51 GMT
வாழப்பாடி:
வாழப்பாடி அருகே சோமம்பட்டி பகுதியில் உள்ள பெரியநாயகி அம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. அப்போது அங்கு இருந்த பக்தர்கள் சிலருக்கு இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதில் அதே பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் ரகுவரன் (வயது34) என்பவரை விஜயபிரசாத் (21) என்பவர் ஆடுகளை வெட்டும் கொடுவாளால் வெட்டினார். இதில் காயமடைந்த ரகுவரன் வாழப்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் வாழப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விஜய் பிரசாத்தை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்