சங்ககிரி அருகே பெயிண்டர் தற்கொலை

சங்ககிரி அருகே பெயிண்டர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-05-03 22:49 GMT
சங்ககிரி:
சங்ககிரி அருகே நாரப்பன்சாவடி பகுதியை சேர்ந்தவர் அய்யம்மாள் (வயது 42). இவருடைய மகன் பூபதி (21). மகள் தீபா. பூபதி பெயிண்டர் வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் பூபதி, தனது தாய் அய்யம்மாளிடம் மோட்டார் சைக்கிள் வாங்கி தர வேண்டும் என்று அடிக்கடி வற்புறுத்தி வந்துள்ளார். இதனிடையே நேற்று முன்தினம் இரவு மது குடித்துவிட்டு பூபதி வீட்டுக்கு வந்துள்ளார். இதை பார்த்த அவரது தாய் அய்யம்மாள் கண்டித்துள்ளார். இதனால் பூபதி வீட்டில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சங்ககிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்