இடங்கணசாலையில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் தர்ணா

இடங்கணசாலையில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-05-03 22:35 GMT
இளம்பிள்ளை:
இடங்கணசாலை நகராட்சிக்கு உட்பட்ட 2-வது வார்டு தூதனூர் பகுதியில் கடந்த ஒரு மாத காலமாக சீராக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என தெரிகிறது. எனவே சீராக குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலி குடங்களுடன் இடங்கணசாலை கிராம நிர்வாக அலுவலகம் முன்பு திடீெரன தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 
இது குறித்து தகவல் அறிந்து வந்த இடங்கணசாலை நகராட்சி தலைவர் கமலக்கண்ணன், துணைத்தலைவர் தளபதி, ஆணையாளர் ரவிச்சந்திரன், கிராம நிர்வாக அலுவலர் கோபால், மகுடஞ்சாவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் பிரபு ஆகியோர் விரைந்து வந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சீரான குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்