மூவர் கால்பந்து போட்டி: பாவூர்சத்திரம் அணி சாம்பியன்
தென்காசியில் நடந்த மூவர் கால்பந்து போட்டியில் பாவூர்சத்திரம் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
நெல்லை:
தென்காசி கால்பந்து கழகம் சார்பில் முதலாம் ஆண்டு மாநில அளவிலான மூவர் கால்பந்து போட்டி தென்காசியில் நடைபெற்றது. தமிழகத்தில் இருந்து 26 அணிகள் கலந்துகொண்டன. இறுதி ஆட்டத்தில் பாவூர்சத்திரம் நியூகேலக்சி அணியினரும், தென்காசி கால்பந்து கழக அணியினரும் மோதினர். இதில் 1-0 என்ற கோல் கணக்கில் பாவூர்சத்திரம் அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. தென்காசி அணி 2-வது இடத்தை பிடித்தது.
பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் தென்காசி கால்பந்து கழகம் சார்பில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டிக்கான ஏற்பாடுகளை தென்காசி கால்பந்து கழக தலைவர் சிதம்பரம், செயலாளர் பிஸ்வாஸ் மற்றும் காமேஷ், இசக்கிராஜ், வேல்பாண்டி, இசக்கி அஜிஸ் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.