கோவில் அன்னதான மண்டபம் கட்டும் இடத்தை எம்.எல்.ஏ. ஆய்வு
பாப்பான்குளம் கருத்தீஸ்வரர் கோவிலில் அன்னதான மண்டபம் கட்டும் இடத்தை மனோஜ்பாண்டியன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
கடையம்:
கடையம் அருகே உள்ள ரவணசமுத்திரம் சொக்கலிங்க சுவாமி மீனாட்சி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்துவது தொடர்பாக ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன், அந்த கோவிலை பார்வையிட்டார். அப்போது, மந்தியூர் ஊராட்சியில் நெற்களம் அமைக்க வேண்டும் என பஞ்சாயத்து தலைவர் கல்யாணசுந்தரம் கோரிக்கை வைத்தார். அதன்பின் அந்த பகுதியை நேரில் சென்று பார்வையிட்டு, வாகைகுளம் முப்புடாதி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டார்.
பின்னர் அத்திரிமலை கோரக்கநாதர் கோவிலுக்கு தினசரி பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை மனுவை அளித்தனர். பாப்பான்குளம் கருத்தீஸ்வரர் கோவிலில் அன்னதான மண்டபம் கட்டும் இடத்தை நேரில் பார்வையிட்ட அவர், வாகைகுளத்தில் மழையினால் வீடு இடிந்து விழுந்ததில் 2 பேர் பலியான வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறி நிதி உதவி வழங்கினார்.