அட்சய திருதியையொட்டி கர்நாடகத்தில் ஒரேநாளில் 22 டன் தங்க நகைகள் விற்பனை
அட்சய திருதியையொட்டி கர்நாடகத்தில் 22 டன் தங்க நகைகள் விற்பனை ஆனது.
பெங்களூரு: நாடு முழுவதும் நேற்று அட்சய திருதியை தினத்தையொட்டி ஏராளமானோர் நகைக்கடைகளில் குவிந்து நகைகளை வாங்கினர். இதற்காக நகைக்கடைகள் அதிகாலையிலேயே திறக்கப்பட்டு நள்ளிரவு வரை விற்பனை நடந்தன. இதுபோல் கர்நாடகத்திலும் நகைக்கடைகளில் வாடிக்கையாளர்கள் கூட்டம் அலைமோதியது.
மக்கள் நகைக்கடைகளில் குவிந்து நகைகள், வெள்ளி ஆபரணங்களை வாங்கிச் சென்றனர். இவ்வாறாக நேற்று ஒரேநாளில் மட்டும் கர்நாடகத்தில் 22 டன் தங்க நகைகள், 15 டன் வெள்ளி ஆபரணங்கள் விற்பனை ஆனதாக கூறப்படுகிறது. இந்த தகவலை கர்நாடக மாநில நகைக்கடை உரிமையாளர்கள் சங்க நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.