மின்னல் தாக்கி பசுமாடு சாவு
தேவர்குளம் அருகே மின்னல் தாக்கி பசுமாடு பரிதாபமாக இறந்தது.
பனவடலிசத்திரம்:
மானூர் ஒன்றியம் தேவர்குளம் அருகே உள்ள வடக்கு அச்சம்பட்டி ஊரைச் சேர்ந்தவர் சாலமோன் (வயது 55). விவசாயி. இவர் நேற்று தனது பசுமாட்டை மேய்ச்சலுக்காக ஊருக்கு அருகில் உள்ள தோட்டத்தில் கட்டிப்போட்டு இருந்தார். மாலையில் திடீரென அந்த பகுதியில் இடி-மின்னலுடன் மழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கியதில் பசுமாடு பரிதாபமாக இறந்தது.