மோட்டார்சைக்கிளில் புகையிலை பொருட்கள் கடத்தியவர் கைது
சங்கரன்ேகாவிலில் மோட்டார்சைக்கிளில் புகையிலை பொருட்கள் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் டவுன் போலீசார் நேற்று முன்தினம் இரவு சங்கரன்கோவில் கீதாலயா தியேட்டர் ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் சந்தேகப்படும்படியாக வந்தவரை நிறுத்தி விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் சங்கரன்கோவில் லட்சுமியாபுரம் முதல் தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் தவசி என்பதும், அவர் மோட்டார் சைக்கிளில் புகையிலை பொருட்களை கடத்தியதும் தெரியவந்தது. இதுதொடர்பாக அவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த 15 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.