கிராமசபை கூட்டம்

வள்ளியூர் யூனியனுக்கு உட்பட்ட காவல்கிணறு பஞ்சாயத்தில் கிராம சபை கூட்டம் நடந்தது.

Update: 2022-05-03 20:27 GMT
பணகுடி:
வள்ளியூர் யூனியனுக்கு உட்பட்ட காவல்கிணறு பஞ்சாயத்தில் கிராம சபை கூட்டம் தலைவர் இந்திரா சம்பு தலைமையில் நடந்தது. கூட்டத்தில் கூடங்குளத்தில் அமையவிருக்கும் அணுக்கழிவு மையத்தினால் பெரும் பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்கும் பொருட்டு அங்கு அணுக்கழிவு மையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், காவல்கிணறு இஸ்ரோ மையத்தில் வேலை வாய்ப்புகளில் உள்ளூர் மக்களுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்பன உள்பட 42 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் துணைத்தலைவர் மாம்பழசுயம்பு, அருட்தந்தை ரெக்ஸ், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்