அரசு மருத்துவமனை ஒப்பந்த ஊழியர்கள் வேலை நிறுத்தம்

சம்பள உயர்வு கேட்டு சிவகாசி அரசு மருத்துவமனை ஒப்பந்த ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Update: 2022-05-03 20:15 GMT
சிவகாசி
சம்பள உயர்வு கேட்டு சிவகாசி அரசு மருத்துவமனை ஒப்பந்த ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 
சம்பள உயர்வு 
விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, அருப்புக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் ஆகிய அரசு மருத்துவமனைகளில்  200 பேர் கடந்த 2014 முதல் ஒப்பந்த முறையில் பாதுகாப்பு, சமையல், துப்புரவு, பிளம்பர், தோட்ட வேலை, சலவை, எலக்ட்ரீசியன், சமையல் உதவியாளர் பணிகளை செய்து வருகிறார்கள். இவர்களுக்கு தனியார் நிறுவனம் ஒன்று ஒப்பந்த அடிப்படையில் மாத சம்பளம் வழங்கி வருகிறது. 
இந்தநிலையில் தங்களுக்கு சம்பள உயர்வு வேண்டும் என்று கோரி ஒப்பந்த ஊழியர்கள் சிலர் மாவட்ட நிர்வாகத்திடம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மனு கொடுத்தனர். மனுவை பெற்ற மாவட்ட நிர்வாகம் கூடுதல் சம்பளம் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வழங்குவதாக கூறி உள்ளது. 
போராட்டம் 
இதனால் அதிர்ச்சி அடைந்த ஒப்பந்த பணியாளர்கள் தங்களுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவித்த சம்பளம் வழங்க வேண்டும் என்று கோரி சிவகாசி அரசு ஆஸ்பத்திரி முன்பு நேற்று வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியது. இதனால் நேற்று சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் ஒப்பந்த பணியாளர்கள் செய்து வந்த பணிகள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. சம்பளம் உயர்வு அறிவிக்கும் வரை போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்த பணியாளர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்