எஸ்.புதூர்,
எஸ்.புதூர் அருகே உள்ள கே.இடையபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 50). விவசாயி. இவர் சம்பவத்தன்று தோட்டத்திற்கு சென்ற நேரத்தில் மர்ப நபர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று 3 பீரோக்களை உடைத்து 30 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் புழுதிபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் நேற்று சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்தார். மேலும் நெற்குப்பை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் தலைமையில் தனிப்படை அமைத்து கொள்ளையடித்து சென்ற மர்ம நபரை பிடிக்க உத்தரவிட்டார். இந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆராயவும் உத்தரவிட்டு நடவடிக்கைகளை துரிதப்படுத்தினார்.