ரம்ஜான் பண்டிகையொட்டி முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை
ரம்ஜான் பண்டிகையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் சிறப்பு தொழுகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்துகொண்டனர்.
காரைக்குடி,
ரம்ஜான் பண்டிகையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் சிறப்பு தொழுகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்துகொண்டனர்.
ரம்ஜான் பண்டிகை
ரம்ஜான் பண்டிகையையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, திருப்பத்தூர், காரைக்குடி, இளையான்குடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சிறப்பு தொழுகை நிகழ்ச்சி நடைபெற்றது. சிவகங்கையில் சிவகங்கை-மதுரை முக்கு பகுதியில் உள்ள ஈத்கா மைதானத்தில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
இதில் சிவகங்கை வாலாஜா நவாப் பள்ளிவாசல் தலைமை இமாம் மவுலவி முகம்மது ஆபிதீன் பாக்கவி நடத்தினார். மவுலவி முகம்மது மன்சூர் காஷிபி சிறப்பு சொற்பொழி வாற்றினார். சிறப்பு பிரார்த்தனையை மவுலவி சுல்தான் ஹைரி செய்தார். இதில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல் காரைக்குடி சின்னையா அம்பலம் பள்ளி பகுதியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் நேற்று காலை சிறப்பு தொழுகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட சிறப்பு பேச்சாளர் ஹாரிஸ் கலந்துகொண்டு சிறப்புரை யாற்றி னார். இதில் ஏராளமான முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிம் பெண்கள் கலந்துகொண்டு தொழுகை நடத்தினர்.
சிறப்பு தொழுகை
இதேபோல் காரைக்குடி வ.உ.சி. சாலையில் உள்ள ஆசாத் பள்ளி ஈதுகா மைதானத்தில் நேற்று காலை சிறப்பு தொழுகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கலந்துகொண்டு தொழுகையில் ஈடுபட்டனர். இதேபோல் ஈதுகா மைதானத்தில் சிவகங்கை மாவட்ட அரசு தலைமை ஹாஜி முகமதுபாரூக்ஆலிம் தலைமையில் சிறப்பு தொழுகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கலந்துகொண்டனர்.
காரைக்குடி ரம்ஜான் நிகழ்ச்சியில் காரைக்குடி இஸ்லாமிய வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் அப்பாஸ், ஷாஜகான், ராஜா முகம்மது ஆகியோர் கலந்து கொண்டனர்.
இளையான்குடி
இளையான்குடியில் மேலப்பள்ளிவாசல், சிங்காரத்தோப்பு பள்ளிவாசல், கீழ முஸ்லிம் பள்ளிவாசல் ஐ.என்.பி.டி. பள்ளிவாசல், சாலையூர் ஹனபி பள்ளிவாசல், சாலையூர் புதூர் பெரிய பள்ளிவாசல், புதூர் சிறிய பள்ளிவாசல், திருவள்ளூர் பள்ளிவாசல், கீழாயூர் பள்ளிவாசல், சோதுகுடி பள்ளிவாசல், இளையான்குடி காயிதே மில்லத் பள்ளிவாசல், கீழாயூர் காலனி பள்ளிவாசல் ஆகிய அனைத்து பள்ளி வாசல்களில் ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகை நடைபெற்றது.