பெட்ரோல் குண்டு வீச்சு: சிகிச்சைபெற்று வந்த காவலாளி சாவு

பெட்ரோல் குண்டு வீச்சில் படுகாயமடைந்து சிகிச்சைபெற்று வந்த காவலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Update: 2022-05-03 19:18 GMT
தேவகோட்டை, 
தேவகோட்டை கருதாவூரணி அருகே உள்ள தொழில் அதிபர் வீட்டின் காவலாளியாக வட்டாயுதம் (வயது57) என்பவர் பணியாற்றினார். கடந்த ஏப்ரல் மாதம் 2-ந்தேதி 3 சிறுவர்கள் பீடி திருட விளையாட்டாக பாட்டிலில் பெட்ரோல் ஊற்றி திரியில் நெருப்பு வைத்து படுத்திருந்த வட் டாயுதம் மேல் வீசினர். தீ வட்டாயுதம் படுக்கையில் விழுந்தது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். குண்டு வீச்சு தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளி வந்தனர். இந்தநிலையில்  மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட வட்டாயுதம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

மேலும் செய்திகள்