ஜோலார்பேட்டையில் பலத்த மழை

ஜோலார்பேட்டையில் பலத்த மழை;

Update:2022-05-04 00:36 IST
ஜோலார்பேட்டை

திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று பலத்த மழை செய்தது. ஜோலார்பேட்டை, ஏலகிரி மலை, நாட்டறம்பள்ளி அருகே வெலக்கல்நத்தம் உள்ளிட்ட சுற்றுப்பகுதியில் நேற்று காலை முதல் மாலை வரை சுட்டெரிக்கும் வெயிலால் புழுக்கத்தில் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். 

மாலை திடீரென கருமேகம் சூழ்ந்து இடியுடன் சுமார் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளிலும் கால்வாய்களிலும் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. 

மேலும் அனல் காற்று வீசிய நிலையில் மழை பெய்ததால் பூமியின் சூடு தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மழை காரணமாக ஜோலார்பேட்டை பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் மின்தடை ஏற்பட்டது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டனர்.

மேலும் செய்திகள்