மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி வாலிபர் பலி 2 பேர் படுகாயம்

ஆற்காடு அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதியதில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2022-05-03 19:04 GMT
ஆற்காடு

ஆற்காடு அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதியதில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர். 
 
மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதல்
 
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டை அடுத்த கலவை பகுதியை சேர்ந்தவர் சமீர். இவரது மகன் முகமது உமேஷ் (வயது 17). இவரும், இதே பகுதியை சேர்ந்த முகமது (17), முபாரக் (17) ஆகியோரும் நண்பர்களாவர்.

நேற்று முன்தினம் இரவு 3 பேரும் ரம்ஜான் பண்டிகை கொண்டாடுவதற்காக முபாரக்கிற்கு சொந்தமான ஒரே மோட்டார் சைக்கிளில் மேல்விஷாரம் நோக்கி வந்து கொண்டிருந்தனர். 

வேப்பூர் பைபாஸ் சாலையில் இரவு 11 மணிக்கு வந்த போது பின்னால் வந்த அரசு பஸ், இவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. 

வாலிபர் பலி

இதில் தூக்கி வீசப்பட்ட 3 பேரும் படுகாயம் அடைந்தனர். உடனே அந்த பகுதியில் இருந்தவர்கள், அவர்களை மீட்டு விஷாரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி முகமது உமேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 2 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் ஆற்காடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு பஸ் டிரைவரான தெங்கடபந்தங்கல் பகுதியை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்