பாதுகாப்பான பட்டாசு உற்பத்தி குறித்த கலந்தாய்வு கூட்டம்

தொழிலக பாதுகாப்பு, சுகாதார இயக்ககத்தின் சார்பில் பாதுகாப்பான பட்டாசு உற்பத்தி குறித்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

Update: 2022-05-03 19:00 GMT
விருதுநகர், 
சிவகாசியில் பட்டாசு ஆலைகளில் விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்கும் பொருட்டு தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தின் சார்பில் பட்டாசு உற்பத்தி சங்க பிரதிநிதிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பட்டாசு ஆலைகளில் விபத்தில்லாமல் உற்பத்தி மேற்கொள்வது குறித்தும், தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்துவது குறித்தும் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குனர் ஜெகதீசன் விளக்கிப் பேசினார். மேலும் பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பு விதிகளை முறையாக பின்பற்றி விபத்தில்லா முறையில் பாதுகாப்பான பட்டாசு தயாரிக்கும் வழிமுறைகள் குறித்து மதுரை கூடுதல் இயக்குனர் ராஜசேகர் எடுத்துரைத்தார். இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பட்டாசு உற்பத்தியாளர் சங்க பிரதிநிதிகள் பாதுகாப்பான பட்டாசு உற்பத்தி குறித்து தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். மேலும் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தின் பயிற்சி வகுப்புகள் பாதுகாப்பான பட்டாசு உற்பத்தியில் பெரும் பங்கு வகிப்பதாகவும் தெரிவித்தனர். மேலும் பாதுகாப்பான பட்டாசு உற்பத்திக்கு அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் தெரிவித்தனர். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை சிவகாசி தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தின் அலுவலர்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்