எருது விடும் திருவிழா

தரகம்பட்டி அருகே எருது விடும் திருவிழா நடைபெற்றது.;

Update: 2022-05-03 18:57 GMT
தரகம்பட்டி,
கடவூர் தாலுகா தரகம்பட்டி அருகே மாவத்தூர் கிராமம் கோடங்கிபட்டி மாலை மேட்டில் அமைந்துள்ள கோடங்கிபட்டி, மணக்காட்டு நாயக்கனூர், கூணமநாயக்கனூர், கம்பளிநாயக்கனூர், காமாநாயக்கனூர் ஆகிய 5 ஊர்களின் தெய்வங்களான கோபாசாமி, வரதராஜ பெருமாள், கன்னிமார் அம்மன் ஆகிய தெய்வங்களின் திருவிழா ஆண்டுதோறும் நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா 3 நாட்கள் நடைபெற்றது. விழாவில் எருது விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 16 மந்தைகளை சேர்ந்த 600-க் கும் மேற்பட்ட எருதுகள் கலந்து கொண்டன. இதில் குறிப்பிட்ட எல்லைக்கோட்டை 137 எருதுகள் தாண்டி சென்றன. 

மேலும் செய்திகள்