மாட்டு கொட்டகை மீது ராட்சத மரம் விழுந்தது; தீயணைப்பு வீரர்கள் 5 மாடுகளை மீட்டனர்

கந்தம்பாளையம் அருகே மாட்டு கொட்டகை மீது ராட்சத மரம் விழுந்தது. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் 5 மாடுகளை மீட்டனர்.

Update: 2022-05-03 18:45 GMT
நொய்யல், 
கந்தம்பாளையம் அருகே ஓ.கே.ஆர். தோட்டத்தில் வசித்து வருபவர் ராதாகிருஷ்ணன் (வயது 67), விவசாயி. இவர் தனது வீட்டின் எதிரே மாட்டுப் பண்ணை வைத்துள்ளார். இந்த பண்ணையின் அருகே ராட்சத வேப்ப மரம் இருந்துள்ளது. நேற்று மாட்டு தொழுவத்தின் கொட்டகை மீது வேப்ப மரம் திடீரென வேரோடு சாய்ந்து விழுந்தது. இதனால் தொழுவத்தின் கொட்டகைக்குள் கட்டியிருந்த 5 மாடுகள் வெளியே வர முடியாமல் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தன. இதையடுத்து அப்பகுதி மக்கள் 5 மாடுகளையும் மீட்க முயற்சி செய்தனர். ஆனால் முடியவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாட்டு தொழுவத்தின் கொட்டகை மீது விழுந்திருந்த வேப்ப மரத்தை எந்திரங்கள் மூலம் வெட்டி அறுத்து மாடுகளை உயிருடன் மீட்டனர்.

மேலும் செய்திகள்