பெருங்களூர் உருமநாதர் கோவில் தேரோட்டம்

பெருங்களூர் உருமநாதர் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.

Update: 2022-05-03 18:44 GMT
ஆதனக்கோட்டை:
பெருங்களூர் மலையமருங்க அய்யனார் கோவில் மற்றும் உருமநாதர் கோவில் திருவிழா காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. இதையடுத்து பூச்சொரிதல் விழா, மது எடுப்பு விழா நடைபெற்றது. தொடர்ந்து நேற்று பக்தர்கள் பால்குடம், காவடி, அலகு குத்தியும், குழந்தைக்கு தொட்டில் கட்டியும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். பின்னர் ேதரோட்டம் நடைபெற்றது. இதில் பெருங்களூர் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்