பாஞ்சாலி அம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம்

அன்மருதை கிராமத்தில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது.

Update: 2022-05-03 18:34 GMT
சேத்துப்பட்டு

அன்மருதை கிராமத்தில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது.

சேத்துப்பட்டு தாலுகா அன்மருதை கிராமத்தில் உள்ள பாஞ்சாலி அம்மன் கோவிலில் மகாபாரத சொற்பொழிவு மற்றும் அக்னி வசந்த விழா கடந்த மாதம் 4-ந் தேதி தொடங்கியது. இதில் பாஞ்சாலி அம்மன், கிருஷ்ணர், தர்மர், பீமன், அர்ஜுனன், ஆகிய சாமிகளுக்கு அபிஷேகம் செய்து முக்கிய வீதி வழியாக எடுத்து வந்து பின்னர் கோவிலுக்கு உள்ளே நிறுவி திருவிழா கொடிஏற்றப்பட்டது. 
தொடர்ந்து 18 நாள் மகாபாரத சொற்பொழிவு, 10 நாள் மகாபாரத நாடகம் நடந்தது. 

நிறைவு திருவிழாவான துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி  நடந்தது. சுமார் 40 அடி நீளத்தில் களிமண் மூலமாக துரியோதனன் உருவம் அமைத்தனர். துரியோதனன், பாஞ்சாலி அம்மன் போல் நாடக கலைஞர்கள் வேடமணிந்து துரியோதனன் படுகளத்தை நடித்து காண்பித்தனர். மாலையில் பல்வேறு மூலிகை மரத்தை கொண்டு கோவில் முன்பு தீக்குண்டம் அமைத்து விரதம் இருந்து வரும் பக்தர்கள் காப்பு கட்டி தீ மிதித்தனர். இதில் பல்வேறு கிராமங்களில் இருந்து வந்த பொதுமக்கள் கலந்துகொண்டனர்,

இதையடுத்து நேற்று தர்மர் பட்டாபிஷேகம் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை அன்மருதை கிராம பொதுமக்கள், விழாக் குழுவினர், இளைஞர்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்