குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கரூர்,
கரூர் வேலுசாமிபுரம், சக்திநகரை சேர்ந்தவர் குள்ளமணி என்கிற மணிகண்டன் (வயது 29). இவர் கரூர் நகர பகுதிகளில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்ததால் கடந்த மார்ச் மாதம் 29-ந் தேதி கரூர் டவுன் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இவர் தொடர்ந்து கரூர் நகர பகுதிகள் மற்றும் கரூர் ஊரக பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் பரிந்துரையின்படி, மணிகண்டனை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் உத்தரவு பிறப்பித்தார். இதற்கான உத்தரவு நகல் திருச்சி மத்திய சிறையில் உள்ள மணிகண்டனுக்கு சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.