தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-;

Update: 2022-05-03 18:07 GMT
ஆபத்தான மின்கம்பம் 
திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் ஒன்றியம், பச்சபெருமாள்பட்டி ஊராட்சி தங்கநகரிலிருந்து நெட்டவேலம்பட்டி செல்லும் சாலையின் குறுக்கே செல்லும் மின்கம்பிகளை தாங்கியுள்ள மின்கம்பத்தின் உச்சியில் மின்கம்பம் உடைந்து காணப்படுகிறது. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், தங்கநகர், திருச்சி. 

மின் விளக்கு அமைக்கப்படுமா? 
திருச்சி மாவட்டம்,  மண்ணச்சநல்லூர் வட்டம்,  சேலம் மெயின் ரோடு பிச்சாண்டார்கோவில் பஸ் நிறுத்தத்தில் இரு புறமும் நிழற்குடை வசதி உள்ளது. ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் பஸ்  பயணம் மேற்கொண்டு வருகின்றனர். நிழற்குடையில் மின் விளக்கு வசதி இல்லாததால் இதனை மதுப்பிரியர்கள், சமூக விரோதிகள்  இரவு நேரங்களில் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் இரவு நேரங்களில் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.  பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும் வகையில்  மின் விளக்கு அமைத்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
ரஞ்சித், பிச்சாண்டார்கோவில், திருச்சி. 

மேலும் செய்திகள்