அம்மச்சார் அம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்

கீழ்மாம்பட்டு அம்மச்சார் அம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம் நடைபெற்றது.

Update: 2022-05-03 17:54 GMT
செஞ்சி

செஞ்சி வட்டம் கீழ்மாம்பட்டு கிராமத்தில் உள்ள அம்மச்சார் அம்மன், செல்வ விநாயகர், சீனிவாச பெருமாள் ஆகிய கோவில்களில் பிரம்மோற்சவம் மற்றும் தேர்த்திருவிழா நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று 2-வது நாளாக பால்குட ஊர்வலம் நடைபெற்றது. முன்னாள் மத்திய ரெயில்வே இணை மந்திரி ஏ.கே.மூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த ஊர்வலத்தில் பத்மினிதேவி மூர்த்தி உள்பட ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து செல்வ விநாயகர், சீனிவாச பெருமாள், அம்மச்சார் அம்மன் ஆகிய ஆலயங்களில் பால் கலச அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. 

விழாவையொட்டி தினமும் காலை, மாலை சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. வருகிற 8-ந் தேதி காலை முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே. மூர்த்தி தலைமையில் தேர் திருவிழா நடைபெற உள்ளது. விழாவை முன்னிட்டு தினமும் காலை, மாலை, இரவு என 3 வேளையும் அன்னதானம் நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகள்